Subscribe Us

சரியானவர் இல்லை என்று தெரிந்தும், விட்டு விலக முடியவில்லை, இதற்கு ஏதாவது வழி சொல்ல முடியுமா?

எமோஷனலா ஒருத்ததவங்க கூட ரொம்ப கனெக்ட் ஆகியிருக்கவங்களால் சரியான முடிவு எடுக்க முடியாது. உங்களுக்கான லீடர்ஷிப் குவாலிட்டியும் போயிடும். ஏன்னா நீங்களே இன்னொருத்தருக்கு எமோஷனலா அடிமையாயிருக்கீங்க.

கண்கள் அவர் தவறை பார்த்தாலும், காது அவரைப்பற்றிய விஷயங்களை கேட்டாலும் மனசு தவறானவர்ன்னு சொன்னாலும். இன்னொரு வாய்ப்பு தருவோம்ன்னு நினைப்பீங்க. விட்டு விலக முடியாததற்கு காரணமும் இது தான்.

இதற்கான வழி ஒன்று தான். நீங்க பெருசா வளர்ந்த மரத்தை பாத்திருக்கீங்களா? வேர்கள் மண்ணோட பிண்ணி பினைஞ்சிருக்கும். அதை மண்ணிலிருந்து பிரிப்பது ரொம்ப கடினம்.

அதே மாதிரி தான் நம்மளும் ஒருத்தவங்களோட எமோஷனல் கனெக்ஷனை உடைக்கலைன்னா இதுலேயிருந்து வெளிவரது கஷ்டம்.

உங்க மனசே ரெண்டு விதமா சொல்லும். ஒன்னு இனிப்பான விஷயங்கள். இன்னொரு வாய்ப்பு கொடுப்போம். இப்படி பண்ணும் போது உங்களுக்கு ஒரு போலி சந்தோஷம் கிடைக்கும். ஆனால் வாழ்க்கை முழுக்க கஷ்டப்படணும்.

ஆழ்மனதிலே உண்மையிலேயே உங்களுக்கு தேவையான பதில் இருக்கும். அதை நீங்க ஏத்துக்காம மறுத்துருப்பீங்க. விட்டுடலாம், விலகிடலாம்னு எண்ணம் இருக்கும். அது கசப்பான உண்மை. அதை உங்களால ஏத்துக்க முடியாததால அதை ஒரு ஆப்சனா எடுத்துக்க மாட்டீங்க.

எதை செய்யறதுக்கு உங்க மனசுக்கு பிடிக்கலையோ அதை செய்யுங்க உங்க கம்பர்ட் ஷோனைவிட்டு வெளிய வந்து முடிவு எடுங்க. அதான் பதில்.